சனி, ஏப்ரல் 07, 2012

வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?



வெளவால் தலை கீழாகத் தொங்குவது ஏன்…?








வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது.

அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற
பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது.

அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான
இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு
செளகரியமாக இருக்கிறது.

ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது
வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும்
எளிதான விஷயமாக உள்ளது
காய்ச்சும்போது பால் பொங்குவது ஏன்?


பால் என்பது தண்ணீர், புரதம் , காபோகைதரேட், கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை.
தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 oC. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு 50
ocல் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 oC நிலை வரும்போதே
பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப்
படர்ந்து நிற்கிறது. (பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (DENSITY) தண்ணீரின்
அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன)

எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து
காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும்
காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம்
படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள்
ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த கொழுப்பு படலத்தோடு
மேலெழும்பி பொங்கி வழிகிறது.

தொடர்ந்து துலாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்?

பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துலாவிக் கொண்டேயிருந்தால்
மேற்ப்பரப்பில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. தோன்றும் காற்றுக்
குமிழ்கள் உடனுக்குடன் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது
தடுக்கப்படுகிறது.

நன்றி  :
http://www.tamilcloud.com

by
வழிபோக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக